Wednesday, May 22, 2019

LONG TERM SHARE MARKET INVESTMENT STRATEGY


ஷேர் மார்கெட் நீண்ட கால வியூகம்

           (LONG TERM SHARE MARKET STRATEGY)


     பொதுவாக வியூகம் என்பது எப்போது தேவை? போர்க்களத்தில்தான். போரில் எப்படி ஜெயிப்பது என்று வரும்போது நமக்கு ஒரு செயல்திட்டம் வேண்டும். இந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற வழி அமைத்து கொடுப்பதுதான் வியூகம்.   பங்கு சந்தை என்பது ஒரு போர்களம் என்று சொல்கிற அளவுக்கு பயங்கரமான விஷயமில்லை என்றாலும் நீங்கள் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவதற்கு சரியான வியூகம் தேவை.  





       நாம் இங்கு பார்க்கப் போகும் வியூகம் நீண்ட கால முதலீட்டிற்கு உகந்தது (10 முதல் 15 ஆண்டிற்குரியது). அவற்றை பற்றி பார்போம்.

     

    LONG TERM SHARE MARKET STRATEGY VIDEO


  

நீண்ட கால வியூகம் 1 :


  அன்றாட வாழ்விற்கு மற்றும் குறுகிய காலத்திலேயே தேவைப்படக்கூடிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள். 



        


நீண்ட கால வியூகம் 2 :


           முதல் வியூகத்தை எக்காரணம் கொண்டும் எப்போதும் மீறாமல் கடைபிடிக்க வேண்டும்.






நீண்ட கால வியூகம் 3 :


        உங்கள் போர்ட்போலியோவை  வருடத்திற்கு ஒரு முறை பேலன்ஸிங் செய்வது  என்பது மிக முக்கியமான ஒன்று. 





நீண்ட கால வியூகம் 4 :



  நீங்கள் பங்குச் சந்தைக்கு புதியவராக இருக்கும் பட்சத்தில் பெரிய நிறுவனப் பங்குகளில் அல்லது உங்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.






நீண்ட கால வியூகம் 5 :


    நீங்கள் விரும்பிய பங்குகளை விரும்பிய விலையிலேயே வாங்குங்கள்.  விரட்டி சென்று  அதிக விலையில் வாங்காதீர்கள்.





நீண்ட கால வியூகம் 6 :

        பங்கின் உண்மையான மதிப்பைவிட விலை குறைவாக் கிடைக்கும்போது மட்டுமே வாங்குங்கள்.  



நீண்ட கால வியூகம் 7 :


     தரம் நிரந்தரம் எப்போதும் தரமானநிறுவனப் பங்குகளையே வாங்குங்கள்.  கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொன்னாலும் தரமற்ற நிறுவனப் பங்குகளை வாங்காதீர்கள். 




நீண்ட கால வியூகம் 8 :


      பொறுமை கடலினும் பெரிது.  பங்குகளை வாங்கிய பிறகு பொறுமையாகக் காத்திருங்கள்.  (நினைவில் கொள்க : பங்கு முதலீடு என்பது சுவாரஸியமற்ற (boring) விஷயம்) குழந்தை பிறந்து, வளர்ந்து, படித்து சம்பாதிப்பதற்குக்கூட 21 வருடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது.  அவ்வாறு இருக்கும்போது குறைந்தது ஐந்து வருடமாவது நாம் வாங்கிய பங்கினை வளர்வதற்கு அனுமதிக்க வேண்டாமா.










நீண்ட கால வியூகம் 9 :


      நம்பினோர் கைவிடப்படார், நீங்கள் அலசி ஆராய்ந்து வாங்கிய தரமான பங்குகள் ஒருபோதும் வீண் போகாது, நம்பிக்கையுடன் காத்திருங்கள்.  திடமான நம்பிக்கை இல்லாமல் பங்குகளை வாங்காதீர்கள். 






நீண்ட கால வியூகம் 10 :


      உலகளவில் நிலம் மற்றும் தங்க முதலீட்டை விரும்புபவர்களில் தமிழர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.  ஆகவே அவற்றில் மட்டுமே முதலீடு செய்யாமல், பங்கு முதலீட்டை முன்னிலைக்கு கொண்டு வாருங்கள்.  பங்கு முதலீடு கடந்த 20 ஆண்டுகளில் சம்பாதித்து கொடுத்தது எக்கச்சக்கம்.  இன்னும் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியது ஏராளம்.


           பங்குச்  சந்தை ஒரு கடல் போன்றது.  நாம் படகை எத்திசையில் செலுத்துகிறோமோ அத்திசையில் செல்வதற்கு கடல் ஒரு தளமாக அமைகிறது.  அதுபோல பங்குச் சந்தை நமக்கு ஒரு நல்ல தளம்.  அதை தளமாக உபயோகித்து நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.  


      ஒரு சிறிய உதாரணத்திற்கு YES BANK போன்ற தரமான நிறுவனங்கள் தற்சமயத்தில் பல காரணங்களினால் மலிவான விலையில் கிடைக்கின்றன.  இது போன்ற தரமான நிறுவனங்களை நீண்ட கால முதலீட்டாளர்கள் குறித்துக் கொண்டு சிறுக சிறுக வாங்கிச் சேர்க்கலாம்.


         பங்குச் சந்தை முதலீட்டில் தேர்ச்சி பெற்று ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவதற்கு வருடங்கள் பல ஆகும்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நீண்ட கால வியூகம் சரிவரும்.  உங்களுக்கு எந்த நீண்ட கால வியூகம் பொருந்துகிறது என்று கூர்ந்து கவனித்து, தேர்வு செய்து கொள்ளுங்கள்.  


         உங்கள் நீண்ட கால வியூகம் சரியா, தவறா என்பதை உங்களுக்கு கிடைக்கப் போகும் நஷ்டத்தை பொறுத்து தெரிந்து கொள்ளலாம்.







THANK YOU




COME AGAIN 


CONTACT 

E-mail : sccramesh2019@gmail.com



No comments:

Post a Comment

ABOUT AARTI INDUSTRIES LIMITED SHARE

            AARTI INDUSTRIES  LTD.,   SHARE DETAILS                               AARTI INDUSTRIES  LTD.,   stock made patiently investors  ...